ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது நோயாளியை விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது தும்மி கொண்டிருப்பவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்
யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ''இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஜனாஸாத் தொழுகை தொழும் முறை:-
நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷியின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி
ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று செயல் விளக்கம் காட்டியுள்ளார்கள். மேலும் மற்றொரு ஹதீஸில் ஐந்து தக்பீர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைது இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன் அப்போது அவர் பாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்) என்று கூறினார். அறிவிப்பவர்: தல்ஹா(ரலி)நூல்: புகாரி
முதல் தக்பீரில்
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
இரண்டாம் தக்பீரில் ஸலவாத்து
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
யா அல்லாஹ்! முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தைப்போல் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் !யா அல்லாஹ்! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றாய்! அறிவிப்பவர்: கஃபு இப்னு உஜ்ரா(ரலி)நூல்: புகாரி
மூன்றாம் நான்காம் தக்பீர்களில்
ஜனாஸாத் தொழுகையில் முதல் தக்பீருக்குப் பிறகு உள்ள மூன்று தக்பீர்களில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாவத்து சொல்வதும் தூய்மையான முறையில் (மய்யித்திற்கு) பிரார்த்தனை புரிவதும் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்கள்: ஹாகிம், பைஹகீ
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னுமாலிக்(ரலி)நூல்கள்: முஸ்லிம், அஹமத்
اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا. اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى اْلإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اْلإِيْمَانِ، اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَه
யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணித்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! யா அல்லாஹ்! எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் மரணித்து விடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! யா அல்லாஹ்! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்: அபூதாவூத், திர்மிதி
மேற்கண்ட துஆக்கள் அல்லாமல் மேலும் பலதுஆக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.