எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.thamilcomtip.tk மற்றும் www.onislamicway.tk

.

உங்களுடய மேலான துஆக்களில், எனது மறுமையின் வெற்றிக்காகவும் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள், www.onislamicway.tk எனும் வலைத்தளத்தை நாடுங்கள்

திங்கள், 12 மார்ச், 2012

பிரயாணத்தின்போது



அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 2392
பிரயாணத்திலிருந்து திரும்பும்போது
அல்லாஹ்! இதில் நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 1496
வெளியூரில் தங்கும்போது
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்து தீங்கின் விட்டும் அவனிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம்4881, 4882
மேட்டில் ஏறும்போது
அல்லாஹ் மிகப்பெரியவன்
மேட்டிலிருந்து இறங்கும்போது
அல்லாஹ் பரிசுத்தமானவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எமது இந்த வலைத்தளம் குறித்த உங்களின் கருத்து என்ன?