இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்:புகாரி 833
இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய். நூல்:புகாரி 833,6326,7388
நான் முந்திச் செய்ததையும் பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாக் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன் நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நூல்: திர்மிதி 3343
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக