
அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158

சங்கடம் நீங்க

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092


யா அல்லாஹ்! உன் அருளையே ஆதரவு வைக்கிறேன். ஆகவே கண் இமை மூடும் அளவிற்குக்கூட என்னை என் மனதின்பால் ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடைய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்கு நீ சீராக்ககி வைப்பாயாக! வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு) இல்லை. நூல்கள்: அபூதாவூத் 4/324 அஹ்மத் 5/42உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். அல்குர்ஆன் 21:87


அல்லாஹ், அல்லாஹ்வே என் இரட்சகன், அவனுக்கு எப்பொருளையும் நான் இணையாக்கமாட்டேன். நூல்கள்: அபூதாவூத்2/87 இப்னுமாஜ்ஜா 2/335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக